2008-12-20 20:50:50

பாகிஸ்தான் - கல்வி கற்றலே கிறிஸ்தவர்களின் வெற்றிக்கு வழி. 20,டிசம்பர்.


பாகிஸ்தானின் கிறிஸ்தவப் பயிலக மன்றத்தில் சர்வ சமயக் கலந்துரையாடல் நடந்தது . இஸ்லாமிய வழக்குரைஞர் அஸ்லாம் காக்கி என்பவர் குழந்தைகளை மதராஸி என்னும் இஸ்லாமியக் கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதற்கு முன்னர் நன்கு யோசனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார் . பாகிஸ்தானில் எல்லாப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் அலசி , குறைகளை நீக்கி , வளர்ச்சி பெற வழிகாட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் . இம்மாதம் 16 ஆம் தேதி சமயத் தீவிரவாதமும் அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்கு அடிப்படை முயற்சிகளும் என்ற தலைப்பில் கத்தோலிக்க பயிலக மன்றத்தில் ராவல்பிண்டியில் கருத்தரங்கு நடந்தது . அதுபோது சமயத் தீவிரவாதத்தை அரசு தலையீட்டுக்காகக் காத்திருக்காமல் எதிர் கொள்ள வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது . வெறுப்புணர்வையும் பிரிவினையையும் பயிற்றுவிக்கும் பாட நூற்களை சீர்தூக்கிப்பார்த்து தவறுகளை நீ்க்கவேண்டும் எனக்கருத்துப் பரிமாறப்பட்டுள்ளது . பாகிஸ்தானின் புகழ்பெற்ற முஸ்லிம் வழக்கறிஞர் முகம்மது அஸ்லாம் காக்கி தீவிரவாதத்தைக் கண்டித்துள்ளார் . அருள் தந்தை போனி மெண்டஸ் மனித உரிமைகளைக் காப்பதற்காக பல செயல் திட்டங்களை நடத்திவருகிறார் . கல்வியறிவை அடிப்படையிலிருந்து சரியான முறையில் வழங்கவேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார் .










All the contents on this site are copyrighted ©.