2008-12-20 19:58:40

காஸாவில் இன்னும் மூன்று வாரங்களில் காஸாவில் ஒருமரம்கூட இருக்காது - ஓர் அரசு சாரா அமைப்பு எச்சரிக்கை


டிச.20,2008.பாலஸ்தீனாவின் காஸாவில் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்து வருவதாலும்,

அது கிடைக்கும் போது அதன் விலை இமயத்துக்குச் செல்வதாலும் மக்கள் பச்சை விறகுகளைத் தற்சமயம் பயன்படுத்துகின்றனர், இந்நிலை தொடர்ந்தால் இன்னும் மூன்று வாரங்களில் காஸாவில் ஒருமரம்கூட இருக்காது என்று ஓர் அரசு சாரா அமைப்பின் தமீர் அல் பஹாரி மிஸ்னா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இதற்கிடையே மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேலுக்கும் காஸா பகுதியிலுள்ள பாலஸ்தீன தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையில் கடந்த ஆறு மாதங்களாக இருந்துவந்த போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. போர்நிறுத்தம் முடிந்துவிட்டது என்றும் அது நீடிக்கப்படவில்லை என்றும் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிபிசி கூறியது.








All the contents on this site are copyrighted ©.