2008-12-18 20:34:03

வேறுபட்ட கலாச்சாரங்கள் நமக்கு நல்ல ஆசிரியர்கள் என்கிறார் திருத்தந்தை. 18,டிசம்பர் ,08 .


பல்வேறு கலாச்சாரங்கள் நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் பலப்பல என்றும் அவற்றிற்கு அஞ்சத்தேவையில்லை என்றும் திருத்தந்தை பல்வேறு நாட்டு அரசுத் தூதர்களை வரவேற்று அவர்கள் கொண்டுவந்த அரசுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டபோது கூறினார் . தொடக்கத்தில் அவர்கள் அனைவருக்கும் பிரெஞ்சு மொழியில் செய்தி வழங்கிய திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் பின்னர் தனித்தனியே தாம் தயார் செய்து வைத்திருந்த ஒவ்வொரு நாட்டுக்கும் தேவையான செய்தி உரைகளை தூதர்களிடம் வழங்கினார் . நாட்டுத்தூதர்கள் அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்யவேண்டும் எனக் கூறினார் . நீதியை நிலைநாட்டி உள்நாட்டிலும் மற்ற நாடுகளோடு கொண்டுள்ள உறவுகளில் நட்பினை உறுதிசெய்யுமாறும் ,சமதானத்தையும் ஒருமைப்பாட்டையும் நிலைபெறச்செய்யவும் கேட்டுக்கொண்டார் . மாலாவியாவுக்கு வழங்கிய செய்தியில் ஆப்பிரிக்காவில் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் உடனடியான அவசியத்தேவை என்றார் . ஸ்வீடன் நாட்டுக்கு வழங்கிய செய்தியில் மனிதச் சுதந்திரத்தோடு நன்னெறிகளையும் காக்க வேண்டும் எனத் தெரிவித்தார் . லக்சம்பர்க் நாட்டில் கருணைச் சாவை வரவேற்கும் போக்கும் , தற்கொலைக்குத் துணைபோவதும் தவிர்க்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார் . மனித மாண்பு போற்றப்படவேண்டும் எனக் கூறினார் .








All the contents on this site are copyrighted ©.