2008-12-18 20:48:31

சமயச் சுதந்திர ஆணையகம் – ஈராக் அரசு கிறிஸ்துவர்கள் தாக்கப்படுவதை கண்டுகொள்வதில்லை . 18, டிசம்பர் , 08 .


அமெரிக்காவின் அகில உலக மதச் சுதந்திர ஆணையகம் ஈராக் நாட்டில் நடக்கும் மதச் சுதந்திரத்துக்கு எதிரான செயல்பாடுகளைக் கண்டித்துள்ளது . ஈராக் நாட்டு அரசு இந்தத் தாக்குதல்களைச் சகிப்புத்தன்மையோடு, கண்டுகொள்ளாது பாராமுகமாக இருக்கிறது . முக்கியமாக ஈராக்கின் வலுக்குறைந்த சிறுபான்மை சமயத்தவரைத் தாக்குவதால் ஈராக்கை தனிக்கவனத்துக்குரிய நாடாகக் கருதவேண்டிய ஒன்றாக அமெரிக்காவின் சமயச் சுதந்திர மன்றம் தெரிவித்துள்ளது . பல்வேறு காலக்கட்டத்தில் அங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்துள்ள தாக்குதல்களை அக்கழகம் அட்டவணைப்படுத்தியுள்ளது . ஈராக்கில் 14 இலட்சம் கிறிஸ்துவர்கள் 2003 ஆம் ஆண்டில் வாழ்ந்திருக்கிறாரகள் . தற்பொழுது அங்கு 5 இலட்சத்திலிருந்து 7 இலட்சத்துக்குள் உள்ள எண்ணிக்கையி்ல்தான் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருவதாக அந்த அமைப்பின் செய்தி தெரிவித்துள்ளது .








All the contents on this site are copyrighted ©.