2008-12-18 18:28:25

இத்தாலியில் கருணைச் சாவுக்கு தற்காலிகத் தடை .181208 .


உணர்விழந்து , 16 ஆண்டுகளாக உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இத்தாலியப் பெண்மணி கருணைச் சாவு பெற முன்னரே அனுமதி அளித்துள்ளது இத்தாலிய உச்ச நீதிமன்றம் . இதற்கு வத்திக்கான் அதிகாரி எதிர்ப்புத் தெரிவித்திருந்தார் . இவ்வாரம் செவ்வாய்க்கிழமை இத்தாலியின் நல வாழ்வு அமைச்சர் மவுரிசியோ சக்கோனி தற்காலிகமாக இதனைத் தடுத்துள்ளார் . அந்த அம்மையார் பெயர் எலுவானா எங்லாரோ . அவருடைய மருத்துவர்களையும் குடும்பத்தினரையும் உச்சநீதிமன்ற அனுமதியை செயல்படுத்தவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் . எங்லாரோவுக்குக் கருணைச் சாவை வழங்கத் திட்டமிட்டு அவரை வேறு மருத்துவ மனைக்கு மாற்றுவதற்கு அவரது குடும்பம் ஏற்பாடு செய்துகொண்டிருந்தது . இத்தாலியின் எல்லா மருத்துவமனைகளுக்கும் அனுப்பிய செய்தியில் நோயுற்று உணர்வின்றி இருக்கும் ஒருவருக்கு அவரது இயலாத நிலையில் அவர் உயிருக்கு ஊறு விளைவிப்பது ஒரு பக்கமாகச் செயலாற்றுவது எனக் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.