2008-12-18 20:31:46

ஆன்மா இல்லாத உலகப் பொருளாதாரம் அமைதியைக் குலைக்கிறது. ஜப்பான் ஆயர்கள் .18 , டிசம்பர் , 08 .


ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைச் சட்டங்களை உலகளவில் அமல்படுத்திய 60 ஆம் ஆண்டு விழா எடுக்கும் சமயம் ஜப்பான் ஆயர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர் .

அவர்கள் வெளியிட்ட செய்தியில் இன்றைய சீர் குலைந்த பொருளாதாரம் மக்கள் வாழ்வில் பெரும் துயரத்தைக் கொண்டுவந்துள்ளது . மனிதம் வாழ்வதற்குரிய அடிப்படை உரிமையே பறிபோவதாகக் கூறியுள்ளனர் . பொருளாதாரச் சீரழிவு உலக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் எனக் கூறியுள்ளனர் . நன்னெறிக் கோட்பாடுகளை மறந்து பொருளாதாரம் இயங்கும்போது மனித மாண்பு தாழ்வு நிலையை அடைகிறது எனக் கூறியுள்ளனர் ஜப்பான் நாட்டு ஆயர்கள் .








All the contents on this site are copyrighted ©.