2008-12-17 15:43:38

ஸ்பெயின் ஆஸ்ட்ரியா போன்ற நாடுகளில் பிறப்பு விகிதம் 0.1 விழுக்காடுகூட இல்லை - கத்தோலிக்க-ஆர்த்தோடாக்ஸ் கூட்டம்


டிச.17,2008. ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடியைவிட குடும்பப் பிரச்சனை ஆழமானதாக இருக்கின்றது என்று கத்தோலிக்க-ஆர்த்தோடாக்ஸ் கூட்டத்தில் கூறப்பட்டது.

குடும்பம்-மனித சமுதாயத்திற்கு நல்லது என்ற தலைப்பில் இத்தாலியின் த்ரெத்தோவில் கூட்டம் நடத்திய இவ்வமைப்பு வெளியிட்ட இறுதி அறிக்கையில், இறையியல் விவகாரங்கள் பற்றி கவனம் செலுத்துவதை விட்டு இன்றைய மற்றும் எதிர்கால சமுதாயத்தின் மனித இனம் பற்றிய முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியதாகச் சொல்லப்பட்டுள்ளது.

சமூக மற்றும் நன்னெறி விவகாரங்களில் இவ்விரு சபைகளின் பொதுவான நிலைப்பாட்டையும் இக்கூட்டத்தினர் விவாதித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தாய்மையின் புனிதம் மற்றும் அதனை மனித சமுதாயம் மதிக்க வேண்டியதன் அவசியத்தை இவ்விரு சபைகளும் உணருவதாகவும் கூறியுள்ள அவர்கள், தாய்மாரின் இல்லப்பணி மற்ற எந்த வேலைகளுக்கும் சற்றும் குறைவானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் பிறப்பு விகிதம் மிகக் குறைவு, ஸ்பெயின் ஆஸ்ட்ரியா போன்ற நாடுகளில் அது 0.1 விழுக்காடுகூட இல்லை, ஜெர்மனியிலும் இத்தாலியிலும் மக்கள் தொகை பெருக்கம் எதிர்மறையாக இருக்கின்றது என்றும் அறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.