2008-12-16 16:21:19

மத்திய கிழக்குப் பகுதியின் அமைதிக்காக அமெரிக்க சமயத் தலைவர்கள் ஒபாமாவிடம் விண்ணப்பம்


டிச.16,2008. அரபு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவில் அமைதியை ஊக்குவிப்பதற்கு அமெரிக்க ஐக்கிய குடியரசின் தலைமைத்துவத்தைப் பயன்படுத்துமாறு புதிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமாவை அந்நாட்டு கிறிஸ்தவ, யூத மற்றும் முஸ்லீம் சமயத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வாஷிங்டன் முன்னாள் பேராயர் கர்தினால் தெயோதோர் மெக்காரிக் உட்பட தேசிய பல்சமய கழகத்தலைவர்கள் இணைந்து கையெழுத்திட்டு இம்மாதத்தில் அனுப்பியுள்ள கடிதத்தில், அரபு நாடுகள், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவில் அமைதியை ஊக்குவிப்பதற்குத் தான் முன்னுரிமை கொடுக்கவிருப்பதாக ஒபாமா கூறியிருப்பதற்குப் பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் தனது உறுதிப்பாட்டை செயல்படுத்துமாறும் அவர்கள் கேட்டுள்ளனர்.

இக் கடிதத்தில் கிறிஸ்தவ, யூத மற்றும் முஸ்லீம் சமயத் தலைவர்கள் மட்டுமன்றி, 25க்கும் மேற்பட்ட தேசிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.

 








All the contents on this site are copyrighted ©.