2008-12-16 16:20:38

ஒரிசா கிறிஸ்தவர்கள் இவ்வாண்டு கிறிஸ்துமஸைக் கொண்டாட இயலாமல் இருக்க நேரிடும் - கட்டாக் புவனேஷ்வர் பேராயர்


டிச.16,2008. ஒரிசா கிறிஸ்தவர்க்குப் போதுமான பாதுகாப்பு கிடைக்காததால் அவர்கள் இவ்வாண்டு கிறிஸ்துமஸைக் கொண்டாட இயலாமல் இருக்க நேரிடும் என்று கட்டாக் புவனேஷ்வர் பேராயர் இரபேல் சீனத் கவலை தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் இறுதியிலிருந்து ஏழு வாரங்களாக கிறிஸ்தவர்க்கு எதிரான தாக்குதல்களை நடத்திய இந்து தீவிரவாதக் குழுக்கள் ஒரிசாவில் தொடர்ந்து வீரியமுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

திருப்பீட சார்பு தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோவுக்குப் பேட்டியளித்த பேராயர், நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே இருக்கின்றனர், பயம் மற்றும் பாதுகாப்பின்மையால் தங்கள் கிராமங்களுக்குத் திரும்ப இயலாமல் இருக்கின்றனர் என்றார்.

அத்துடன் சில குழுக்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று வேலை நிறுத்தம் போராட்டம் என்று அறிவித்துள்ளதால் கிறிஸ்துமஸ் நாட்களில் கிறிஸ்தவர்க்கு எதிராய்ப் புதிய தாக்குதல்கள் நட்க்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பேராயர் இரபேல் சீனத் கவலை தெரிவித்தார்.










All the contents on this site are copyrighted ©.