2008-12-16 16:20:49

இந்தியா-பாகிஸ்தான் அமைதி குறித்து பாகிஸ்தான் கத்தோலிக்கத் திருச்சபை கவலை


டிச.16,2008. மும்பையில் இடம் பெற்ற அண்மை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான அமைதி குறித்து பாகிஸ்தான் கத்தோலிக்கத் திருச்சபை கவலை கொண்டுள்ளது.

பாகிஸ்தானின் தெற்கு கடற்கரையிலுள்ள கராச்சி உயர்மறைமாவட்டம், இத்திருவருகை காலத்தில் இவ்விரு நாடுகளுக்கிடையே அமைதியான உறவு நிலவ உருக்கமாகச் செபித்து வருகிறது.

1947இல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து இவ்விரு நாடுகளுக்கிடையே மூன்று போர்கள் நடைபெற்றுள்ளன.

பாகிஸ்தானின் ஏறத்தாழ 17 கோடியே 20 இலட்சம் மக்களில் ஏறத்தாழ 2 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். ஏறத்தாழ 95 விழுக்காட்டினர் முஸ்லீம்கள். இந்தியாவின் ஏறத்தாழ 110 கோடிப் பேரில் 2.3 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் இந்துக்கள்.

இதற்கிடையே பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்காது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி அறிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.