2008-12-13 15:58:43

இந்திய கிராமப்புறப் பெண்களின் முன்னேற்றத்திற்கென மூன்று கோடி டாலருக்கு மேற்பட்ட நிதியுதவியைக் கடனாக வழங்க முன்வந்துள்ளது ஐ.நா.


டிச.13, 2008. இந்திய கிராமப்புறப் பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மூன்று கோடி டாலருக்கு மேற்பட்ட நிதியுதவியைக் கடனாக வழங்க முன்வந்துள்ளது ஐ.நா.நிறுவனம்.

ஐ.எப்.எ.டி என்ற வேளாணமை வளர்ச்சிக்கான ஐ.நா.வின் சர்வதேச நிதி அமைப்பு வழங்கும் இக்கடன் உதவியின் மூலம் ஏறத்தாழ ஒரு இலட்சத்து எட்டாயிரம் கிராமப் பெண்கள் பலனடைவார்கள் என்று அவ்வமைப்பு கூறியது.

இக்கடன் ஒப்பந்தத்தில் இத்தாலிக்கான இந்தியத் தூதுவர் அரிப் ஷாஹித் கான் மற்றும் ஐ.எப்.எ.டின் தலைவர் லெனார்ட் பாஜூம் நேற்று கையெழுத்திட்டுள்ளனர்.

இக்கடன் உதவியின் மூலம் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட சுய உதவி குழுக்கள் தங்களின் உற்பத்திகளை பெருக்கும் மற்றும் சந்தையை அடிப்படையாகக் கொண்ட தொழிலை உருவாக்குவதன் மூலம் வருவாயை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 








All the contents on this site are copyrighted ©.