2008-12-13 15:58:08

அமெரிக்க ஐக்கிய குடியரசின் கர்தினால் ஏவரி டல்லஸ் இறைபதம் அடைந்தார்


டிச.13, 2008 அமெரிக்க ஐக்கிய குடியரசின் கர்தினால் ஏவரி டல்லஸ் இறைபதம் அடைந்ததையொட்டி தமது இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

நியுயார்க் பேராயர் கர்தினால் எட்வர்ட் ஏகனுக்கு இரங்கல் செய்தி அனுப்பிய திருத்தந்தை, இக்கர்தினாலின் உறுதியான விசுவாசத்திற்கான சான்று வாழ்வு, இதயங்கள் மனமாற்றமடையவும் நற்செய்திப்பணி வளரவும் தொடர்ந்து உதவும் என்ற நமபிக்கையையும் தெரிவித்தார். இன்னும் கர்தினால் ஏவரின் குடும்பத்தினர், இயேசு சபையினர், போர்டுகாம் பல்கலைகழகத்தினர் என அனைவருக்கும் தமது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார் அவர்.

நியுயார்க் இயேசு சபை இல்லத்தில் நேற்று இறந்த 90 வயதாகும் இயேசு சபை கர்தினால் ஏவரி டல்லஸ், 2001இல் கர்தினாலாக உயர்த்தப்பட்டவர்.

இறையியல் வல்லுனராகிய இவர், முப்பதுக்கும் மேற்பட்ட கவுரவ முனைவர் பட்ட விருதுகளைப் பெற்றிருப்பவர். 23 புத்தகங்கள் மற்றும் 750 கட்டுரைகளை எழுதியிருப்பவர்.

பிரிந்த கிறிஸ்தவ சபை குடும்பத்தைச் சேர்ந்த இவர் இளைஞனாக இருக்கும் போதே கத்தோலிக்கத்தைத் தழுவியவர்.

கர்தினால் ஏவரி டல்லஸின் இறப்புடன் திருச்சபையிலுள்ள 190 கர்தினால்களுள் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 116 ஆக உள்ளது.








All the contents on this site are copyrighted ©.