2008-12-11 18:10:01

மிலான் நகருக்கு அதிக மசூதிகள் தேவை என்கிறார் கர்தினால் டெட்சாமான்சி.

11,நவம்பர் .


2002 ஆம் ஆண்டிலிருந்து கர்தினால் டெட்சாமான்சி மிலான் நகரப் பேராயராக இருந்து வருகிறார் . சென்ற சனிக்கிழமை அவர் மிலான் நகருக்கு வழங்கிய செய்தியில் நகரின் எல்லாப் பகுதியிலும் வழிபாட்டுதலங்கள் தேவை எனக் கூறியுள்ளார் . கிறிஸ்தவர்கள் அல்லாத மற்ற சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியமாக இஸ்லாம் நண்பர்களுக்கு மசூதிகள் அவசரத்தேவை என்றார் . நாம் அனைவரும் கலாச்சார ரீதியில் ஒன்றுபட்டு வாழ சிந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் . பொதுவாக இஸ்லாம் மற்ற சமயங்களை மதிப்பதில்லை என்றும் , அம்மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் எனக் கூறப்படுவதையும் , மதத்தை தீய திட்டங்களுக்கு இஸ்லாம் பயன்படுத்துகிறது என்றும் பகுத்தறிவோடு சிந்திப்பதில்லை எனவும் கூறப்படுவதையும் இசுலாத்தினர் மகளிரை மதிப்பதில்லை என்பதையும் கலந்து பேசி எரிச்சலை மூட்டுவதற்கு அல்ல மாறாக கலாச்சார ஒருமைப்பாட்டுக்கு வழிவகுக்க சேர்ந்து சிந்திக்க வேண்டும் என்றும் கூறினார் கர்தினால் தியோனீஜி டெட்டாமான்சி .








All the contents on this site are copyrighted ©.