2008-12-11 14:54:23

டிசம்பர் 12 - திருவருகைக்காலச் சிந்தனை


இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி. இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று என்றார். அன்பர்களே, மத்தேயு நற்செய்தி, 11, 16ல் இவ்வாறு வாசிக்கிறோம். ஞானம் அதன் செயல்களால் நிரூபிக்கப்படும். ஏனெனில் ஞானம் நல்லதை மட்டுமே செய்யும். ஞானத்தின் ஊற்றாகிய இயேசுவும் நல்லதை மட்டுமே செய்தார். சரியான பார்வையும் சரியான புரிதலும் சரியான வாழ்வுமே மனித சமுதாயத்தை சரியான பாதையில் வழிநடத்தும்.








All the contents on this site are copyrighted ©.