2008-12-10 16:03:59

நம் சிந்தனைக்கு பாப்பிறை தாமசுஸ். வாழ்ந்த காலம் - கி.பி. 305 - 384 .


இஸ்பானிய நாட்டைச் சேர்ந்தவர். திருச்சபையின் கடுமையான கொந்தளிப்பின் நாட்களில் திருத்தந்தையாகத் தெரிந்து கொள்ளப்பட்டார் .ஆயர்களைப் பலமுறைக் கலந்து பேசி பிரிவினைச் சபையினரைக் கட்டுப்படுத்த முயன்றார் . மறை சாட்சியரின் கல்லறைகளைச் சிறந்த முறையில் புதுப்பித்தார். கி.பி . 380 இல் இவரது காலத்தில் தியோடோசியஸ் மன்னன் குடிமக்கள் அனைவரும் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவ ஆணையிட்டான் . விவிலிய மொழிபெயர்ப்பில் புனித ஜெரோமுக்கு பேருதவியாக இருந்தார் . பிழைபடாத திருச்சபையின் பிழைபடாத போதகர் என்று புனித ஜெரோம் இவரைப் புகழ்ந்திருக்கிறார்.








All the contents on this site are copyrighted ©.