2008-12-09 17:31:56

மதச் சுதந்திரத்துக்கு பாதுகாப்பு வேண்டும் வத்திக்கான் அதிகாரி. 09, நவம்பர்.


கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வன்முறைகள் அவர்களுக்குரிய மதச் சுதந்திரத்துக்கு ஊறு விளைவிப்பதாக நாடுகளிடையே நல்ல உறவுகளுக்கான வத்திக்கான் திருப்பீடத்தின் மன்றச் செயலர் பேராயர் மாம்பெர்ட்டி பின்லாந்து நாட்டின் கெலிசின்கியில் இம்மாதம் 4 ஆம் தேதி கூறினார் .ஐரோப்பிய நாடுகளுக்கான பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான கூட்டம் அங்கு நடைபெற்றது. ஐ.நாடுகள் சபை மனித உரிமைச் சட்டத்தை 60 ஆண்டுகளுக்கு முன்னர் அமல் படுத்தியது மிகப்பெரிய வெற்றி என்றார் . மனித உரிமைகள் ஒவ்வொரு நாட்டிலும் செயலில் காட்டப்பட கத்தோலிக்கத் திருச்சபை பணி செய்து வருவதாகத் தெரிவித்தார் . மதச் சுதந்திரம் மக்களின் ஒரு முக்கிய அடிப்படையான உரிமை என வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.