2008-12-09 17:40:03

சிசுக்கொலை செய்யும் கலாச்சாரத்துக்கு எதிராக அமெரிக்காவின் டெக்சாஸ் மறைமாவட்ட ஆயர் போர்க்கொடி உயர்த்துகிறார். 09 ,நவம்பர் .


மகப்பேறுகளைத் தவிர்ப்பதற்கு அறுவைச் சிகிச்சை செய்வதை ஆயர் ஆல்வாரோ கொர்ராடா வன்மையாகக் கண்டித்துள்ளார் . இதற்குத் துணைபோகக்கூடிய மருத்துவர்கள் அவர்களுடைய நன்னெறிகளுக்கு எதிரான செயல்கள் காரணமாக இதில் பங்கேற்பதை மறுக்கச் சொல்லி ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் . நன்னெறிகளுக்கு எதிரான மருத்துவப் போக்கைக் கிறிஸ்தவர்கள் எதிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் . தனி மனித உரிமைகள் என்ற அடிப்படையில் மருத்துவர்கள் கருக்கலைத்தல் , கருணைச் சாவு , மற்றும் குழந்தைப் பேற்றைத் தவிர்க்கும் அறுவைச் சிகிச்சை போன்ற தவறான போக்குகளை அமெரிக்க நாட்டின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஒபாமா ஆதரிப்பதாகக் கூறியுள்ளதையும் ஆயர் ஆல்வாரோ கொர்ராடா வன்மையாகக் கண்டித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.