2008-12-09 17:22:57

உரோமையில் அமல அன்னையின் விழாக் கொண்டாட்டம். 09, நவம்பர் .


முள்ளும் ரோஜாவும் நிறைந்த வாழ்வில் – மாலைகளையும் கவலைகளையும் அன்னை மரியாவின் பாதங்களில் வைப்போம் என்கிறார் திருத்தந்தை. இவ்வாரம் திங்கள் மாலை அன்னை மரியாவின் அமல உற்பவ விழாவை உரோமையிலுள்ள இஸ்பானிய சதுக்கத்தில் கொண்டாடினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . அன்னையின் பாதங்களில் கூடைநிறைய வெள்ளை ரோஜா மலர்களைச் சாற்றினார் . அந்த மலர்கள் நாம் புரியும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் அடையாளம் என்றார் திருத்தந்தை . ஒவ்வொரு ரோஜாவுக்கும் பின்னும் முள்ளிருக்கிறது என்ற பழமொழியை மேற்கோள் காட்டி , ரோஜா மலர்களின் தண்டுகளில் முற்களுக்குப் பஞ்சமில்லை. அங்கு முற்கள் இருப்பது போல , மக்கள் வாழ்வில் பிரச்சனைகளும் , துன்பங்களும் , நோய்களும் , நிறைந்துள்ளன என்றார் திருத்தந்தை . இஸ்பானியப் படிகள் என அழைக்கப்படும் அந்த இடத்தில் உரோமை மக்களும் , சுற்றுலாப் பயணிகளும் திருத்தந்தையைக் காணவும் , அவரோடு அங்கு செபிக்கவும் கூடியிருந்தனர் . அன்னையின் பாதங்களில் மலர்களைக் காணிக்கையாக்கி திருத்தந்தை நோயுற்றோருக்காகவும் , குழந்தைகளுக்காகவும் , துன்புறுவோருக்காகவும் , முதியோருக்காகவும் , புலம் பெயர்ந்து துன்புறுவோருக்காகவும் ,செபித்தார் . சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி , பொதுநல நோக்குடன் நாங்கள் எல்லோருக்கும் உதவிட அன்னையே கற்றுத்தாரும் என மன்றாடினார் திருத்தந்தை. அன்பு வெற்றி கொள்ளும் எனவும் , அருள் பாவத்தைவிட வலிமையானது எனப் பாவமாசின்றிப் பிறந்த அமல உற்பவி உறுதியளிக்கிறார் எனக் கூறினார் . அதனால் எல்லா வகையான அடிமைத்தனத்தலிருந்தும் நாம் வெற்றிபெற முடியும் எனக்கூறினார் திருத்தந்தை . நாம் பிறக்கும் போதே ஜென்மப்பாவம் நம்மோடு வருகிறது என்றும் , கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டோரை அவர் மீட்கிறார் எனவும் கிறிஸ்தவ நம்பிக்கை கூறுவதாகக் கூறிய திருத்தந்தை , பெர்நாதெத் சுபீரியசுக்கு தம்மை அமல உற்பவி என வெளிப்படுத்திய அன்னை மரியாளின் 150 ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் இத்திங்களோடு நிறைவுறுதாகவும் தெரிவித்தார் .








All the contents on this site are copyrighted ©.