2008-12-08 20:26:13

மாஸ்கோவின் பிதாப்பிதா 2 ஆம் அலெக்சியின் அடக்கச்சடங்கில் வத்திக்கானின் பிரதிநிதிகள். 081208.


மாஸ்கோவின் பிதாப்பிதா 2 ஆம் அலெக்சி சென்ற வியாழன் அன்று காலமானார் . அவருக்கு வயது 79. இருதய நோயால் துன்புற்று வந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. அவரது அடக்கச் சடங்குகள் நவம்பர் 09, இந்தச் செவ்வாயன்று மாஸ்கோவில் நடக்கிறது. அங்குச் சென்று அடக்கச் சடங்கில் கலந்து கொள்ள வத்திக்கான் திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான மன்றத்தின் தலைவர் கர்தினால் வால்டர் காஸ்பர் , திருப்பீட நீதி மற்றும் அமைதிக்கான மன்றத்தின் ஓய்வு பெற்ற தலைவர் கர்தினால் ரோஜர் எச்செகரே , இரஷ்ய கூட்டமைப்பின் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் அந்தோனியோ மெனினி , கிறிஸ்தவ ஒன்றிப்புக்காகப் பணி செய்யும் இயேசு சபையைச் சேர்ந்த தந்தை மிலான் ஜுஸ்ட் , மற்றும் இரஷ்யாவுக்கான திருப்பீடத் தூதரகத்தின் செயலர் மேதகு அந்தே ஜோசிப் ஆகியோரை திருத்தந்தை அவரது பிரதிநிதிகளாக கலந்து கொள்ள நியமித்துள்ளார் . மாஸ்கோவின் மூன்று அரசர்கள் பேராலயத்தில் இறந்த பிதாப்பிதாவின் இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. பிதாப்பிதாவின் பூத உடல் உலக மீட்பர் பேராலயத்தில் இறைமக்கள் தங்கள் அனுதாபங்களைத் தெரிவிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. புதிய பிதாப்பிதா தேர்வு செய்யப்படும் வரை ஸ்மோலென்ஸ்க் மற்றும் கலிங்கார்டின் மெட்ராபோலிட்டன் கிரில் இடைக்காலப் பிதாப்பிதாவாக இரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.