2008-12-07 20:27:21

கொல்லப்பட்ட அருள் சகோதரிக்கு மனித உரிமை விருது .07,நவம்பர்,08.


அருள் சகோதரி டோரதி ஸ்டாங் 2005 ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டில் கொல்லப்பட்டார். மனித உரிமைகளைக் காப்பதற்காக அவர் உயிரைப் பணயம் வைத்ததற்காக ஐ.நாடுகள் சபை அவருக்கு உயரிய மனித உரிமைகள் பரிசை, இம்மாதம் 10 தேதி இறந்தும் புகழோடும் வாழும் அவருக்கு புகழாரம் சாற்றி இந்த விருதை வழங்க உள்ளது . ஏழைகள் , நிலம் இல்லாதவர்கள் , பிரேசில் நாட்டின் ‘அனப்புப்’ பழங்குடி மக்கள் , இவர்களை கடந்த 40 ஆண்டுகளாக உயிருக்கு ஆபத்து வரும் என எச்சரிக்கப்பட்டாலும் அஞ்சாது அவர்களுக்காகத் தொண்டு புரிந்தார் . உயிர் வாழ குடியானவர்களோடு சேர்ந்து பணியாற்றினார் . அவர்கள் நிலங்களைப் பறித்தவர்களோடு ஏழைகள் சார்பாகப் போராடியிருக்கிறார் . காடுகளை அழிப்பதைத் தடுக்கப் போராடியிருக்கிறார். இந்த வீரச் செயல்ளைப் பாராட்டி ஐ.நாடுகள் சபை சகோதரி டோரத்தி ஸ்டாங் அவர்களுக்கு மனித உரிமை விருதை வழங்கிப் பெருமைப் படுத்தியிருக்கிறது.








All the contents on this site are copyrighted ©.