2008-12-06 16:21:59

கொத்து வெடிகுண்டுகளைத் தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தத்திற்கு உலக கிறிஸ்தவ சபைகளின் மன்றம் பாராட்டு


06டிச.,2008 கொத்து வெடிகுண்டுகளைத் தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தம் மனிதாபிமான மற்றும் வரலாற்று வெற்றி என்று சொல்லி அதற்கு உலக கிறிஸ்தவ சபைகளின் மன்றம் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது.

இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளைப் பாராட்டியுள்ள உலக கிறிஸ்தவ சபைகளின் மன்றத்தின் பொதுச் செயலர் பாஸ்டர் சாமுவேல் கோபியா, இதில் இன்னும் கையெழுத்திடாத அமெரிக்க ஐக்கிய குடியரசு, இரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரயேல், ஜிம்பாபுவே உள்ளிட்ட மற்ற நாடுகளும் கையெழுத்திட்டு இதற்கு ஆதரவு அளிக்குமாறு வலியுறுத்தினார்.

இக்கொத்து வெடிகுண்டுகள் இன்னும் சேமித்து வைக்கப்பட்டுள்ள 75 நாடுகளில் அவை அழிக்கப்படுமாறும் அந்நாடுகளின் அரசுகளைக் கேட்டுக் கொண்டார் கோபியா.

மத்திய கிழக்கு, ஆசியா ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இவ்வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஜெனீவாவை மையமாகக் கொண்ட உலக கிறிஸ்தவ சபைகளின் மன்றமானது 110க்கும் மேற்பட்ட நாடுகளில் 349 கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பாகும்.








All the contents on this site are copyrighted ©.