2008-12-05 18:39:53

அகில உலக இறையியல் வல்லுனர்கள் திருத்தந்தையைச் சந்தித்தனர் . 05 நவம்பர் , 08 .


அகில உலக இறையியல் சிந்தனையாளர்கள் 35 பேர் திருப்பீட இறையியல் சங்கத்தின் செயலர் இயேசு சபையைச் சேர்ந்த மேதகு ஆயர் லூயி பிரான்சிஸ்கோ லதாரியா பெரர் தலைமையில் திருத்தந்தையைச் சந்தித்து ஆசி பெற்றனர் . தொடக்கத்தில் இம்மன்றத்தின் தலைவர் கர்தினால் வில்லியம் ஜோசப் லெவாதா வரமுடியாத சூழ்நிலையில், மேதகு ஆயர் பெரர் திருத்தந்தைக்கு வாழ்த்துக் கூறினார் . அவர்களைத் திருத்தந்தை வாஞ்சையோடு வரவேற்றுப்பேசினார் .

இறையியல் சிந்தனையாளர்கள் திருமுழுக்குப் பெறாத குழந்தைகளுக்கு வானக வாழ்வு பற்றியும் , கடவுள் தந்துள்ள இயற்கைச் சட்டங்கள் பற்றியும் விளக்கமாக நூல் வெளியிட்டுள்ளது பற்றியும் திருத்தந்தையிடம் கூறினர் .



அது பற்றிக் கருத்துக்கூறிய திருத்தந்தை அந்நூற்கள் வத்திக்கானின் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகக் கூறினார். இறையியலில் கருத்துக்கொள்கையும் அதை அடையும் முறையும் பற்றித் திருத்தந்தை பேசினார் . இறைவன் கிறிஸ்துவழியாக வெளிப்படுத்தியுள்ள உண்மைகளை விசுவாச ஒளியில் திருச்சபையோடு இணைந்து முடிவான கொள்கைகளுக்கு வரவேண்டும் எனத் திருத்தந்தை தெரிவித்தார் . ஒரு இறையியலார் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்து உண்மையை வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளதாகத் திருத்தந்தை மேலும் தெரிவித்தார் . கடந்த 5 ஆண்டுகளில் அகில உலக இறையியல் மன்றம் ஆற்றியுள்ள சேவைகளுக்கு நன்றி கூறிய திருத்தந்தை பாசத்தோடு வந்திருந்தோருக்கு தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் .








All the contents on this site are copyrighted ©.