2008-12-04 18:55:02

திறமைகளைவிட மனித குலமே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது

எனக்கூறுகிறார் பேராயர் சில்வானோ தோமாசி . 041208


ஐ.நா சபையின் ஜெனிவாவில் உள்ள அலுவலகத்தில் வத்திக்கான் திருப்பீடத்துக்கான நிரந்தர உறுப்பினர் பேராயர் தோமாசி . இந்த வாரம் செவ்வாய்க்கிழமையிலிருந்து வெள்ளிவரை கல்வி பற்றிய கருத்தரங்கு அங்கு நடைபெற்றுவருகிறது .

அங்கு உரை நிகழ்த்திய பேராயர் சில்வானோ தோமாசி வருங்காலத்தில் சமாதானமாக வாழ்வதற்குக் கல்வி ஒன்றே வழியாகும் என்றார் . ஒருவர் மற்றவரைப் போற்றி மதித்தல் , பல்வேறு கலாச்சாரங்கள் , மரபுகளின் செல்வங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியன கல்வியாலேயே வருகிறது என மொழிந்தார் . அப்படிப்பட்ட கல்வி எல்லா மனிதருடைய தேவைகளையும் கருத்தில் கொள்வதாகக் கூறியுள்ளார் . ஏழைகள் , சமுதாயத்தில் பாதிப்புக்குகளுக்குள்ளாகும் நிலையில் உள்ளோர் , உடலில் குறைபாடுகள் உள்ளோர் , கிராமப்புற மக்கள், நகர்ப்புறச் சேரிகளில் வாழ்வோர் , இளையோர் , என வேறுபாடு இல்லாது அனைவரையும் கவனத்தில் கொள்வதாகக் கூறினார் . திருப்பீடப் பிரதிநிதி பேராயர் சில்வானோ தோமாசி மனித உரிமைகளைச் சட்டமாக்கிய 60 ஆம் ஆண்டை நிறைவு செய்யும் ஐ.நா சபை அனைவரும் கல்வி பெற உள்ள உரிமையைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் .








All the contents on this site are copyrighted ©.