2008-12-04 12:57:38

டிசம்பர் 5 - திருவருகைக்காலச் சிந்தனை


இயேசு கப்பர்நாகுமிலிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர் தாவீதின் மகனே எங்களுக்கு இரங்கும் என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர்கள், ஆம் ஐயா என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இறைவனில் நாம் கொள்ளும் விசுவாசம் பல புதுமைகளைப் பிறப்பிக்கின்றது. நமபினார் கெடுவதில்லை என்பது நான்மறை வேதம். நாம் திக்கற்றவர்களாக விடப்படும் பொழுது நமக்கு இரக்கம் காட்ட நம் உற்றார் உறவினர் நண்பர்கள் தவறலாம். ஆனால் இறைவன் நமமைக் கைவிடமாட்டார். இயேசுவில் விசுவாசம் கொண்ட அந்த இரண்டு பார்வையற்றவர்கள் தங்களது விசுவாசத்திற்கான பலனை அனுபவித்தார்கள். நமது விசுவாசம் எப்படி?








All the contents on this site are copyrighted ©.