2008-12-04 19:00:40

சிலி நாட்டு ஆயர்களுக்குத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் ஆசியுரை வழங்கினார் . 04,டிசம்பர் ,08


சிலி நாட்டு ஆயர்கள் அவர்களுடைய வழக்கமான அத்லீமினாச் சந்திப்புக்குப் பிறகு இந்த வியாழன் காலை திருத்தந்தையைச் சந்தித்தினார் . தொடக்கத்தில் சிலிநாட்டு ஆயர்குழுவின் தலைவர், ரங்காகுவாவின் ஆயர், மேதகு அலைக்சாந்த்ரோ, திருத்தந்தைக்கு ஆயர்கள் சார்பில் வாழ்த்துக்கூறினார் .

அதற்கு நன்றி கூறி தமது பாசமிகு வரவேற்பை நல்கினார் திருத்தந்தை .

அதுபோது இயேசு ஆண்டவர் 12 சீடர்களைத் தேர்ந்தது போல உங்களையும் தேர்வு செய்து உலகெங்கும் நற்செய்தியைப் பரப்பிட அழைப்பு விடுத்துள்ளார் . எனவே நீங்கள் ஆழமாக ஆன்மீக வாழ்வில் வேரூன்றி விசுவாசத்தை ஆழப்படுத்திக்கொள்ளுங்கள் . நம் தலைவராகிய இயேசுவோடு செபத்தின் வழியாக உறவுகொண்டு நீங்கள் இறைமக்களைச் சந்திக்கும்போது இறை வார்த்தையின் ஆற்றல் உங்களோடு இருக்கும் எனத் திருத்தந்தை அறிவுரை வழங்கினார் . வழி நெடுகத் தடைகள் வந்தாலும் ஆண்டவர் நம்மோடு எந்நாளும் இருப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார் . தூய ஆவியானவரின் அருள் துணையால் முதல் சீடர்கள் கொண்டிருந்த வல்லமையோடு நீங்களும் நற்செய்திப் பணியில் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் செயல்படுவீர்கள் எனத் திருத்தந்தை உற்சாகமூட்டி முதுமை எய்திய ஆயர்களுக்கும் துறவியர்களுக்கும் குருக்களுக்கும் குருமாணவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் செபங்களைக் காணிக்கையாக்கி ஆசி வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.