2008-12-04 18:51:20

சமயச் சுற்றுலாப் பற்றி பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ .041208.


கத்தோலிக்கத் திருச்சபையும் சமயச் சுற்றுலாவும் பற்றிப் பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ உரை நிகழ்த்தினார் . பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ வத்திக்கான் திருப்பீடத்தின் புலம்பெயர்வோர் மற்றும் இடம்விட்டு இடம் செல்வோர் மன்றத்தின் செயலராக இருக்கிறார் . உரோமையில் உள்ள தோர் வேர்காட்டா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரமும் மேலாண்மைக் கல்வியும் பயிலும் மாணவர்களுக்கு அவர் இவ்வியாழன் காலை உரை வழங்கினார் .

உரோமைப் பேரரசு காலத்திலேயே பல இடங்களுக்குப் பயணம் செல்லுதல் தொடங்கிவிட்டது எனக் கூறிய பேராயர் நாளும் வளர்ந்து வரும் நிலையில் சமுதாயத்தில் அது பெரும் தாக்கங்களைக் கொடுப்பதாகக் கூறினார் . பொருளாதாரத்தை மாற்றுவதாகக் கூறினார் . ஐ.நாடுகள் சபை பயணம் செல்வதற்கும் ஓய்வெடுப்பதற்கும் மனித உரிமைச் சட்டத்தில் 1948 ஆம் ஆண்டே சட்டம் வழங்கிப் பாதுகாப்பதாக மேலும் கூறியுள்ளார் . 2007 ஆம் ஆண்டு 9 கோடி மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் . ஆன்மீக வாழ்வில் அவர்களுக்குத் துணையிருக்க நாம் அழைக்கப்படுகிறோம் . அவர்களுக்குச் சமூக , பொருளாதார , கலாச்சார உரிமைகள் பற்றிய திருச்சபையின் சிந்தனைகளையும் அமலில் இருக்கும் உரிமைச் சட்டங்களையும் நாம் கொடுத்து உதவ வேண்டும் என உரை வழங்கினார் .








All the contents on this site are copyrighted ©.