2008-12-04 20:45:55

கனடா நாட்டின் உதவியை நாடுகிறது காங்கோ நாடு .041208 .


மனித மாண்புக்கு எதிரான நிகழ்வுகள் காங்கோ நாட்டில் அரங்கேறுகின்றன . இதனை முடிவுக்குக் கொண்டுவர ஆங்கில நாட்டுக் கர்தினால் கோர்மாக் மர்பி ஆங்கிலிக்கன் திருச்சபையின் காண்டர்பரிப் பேராயரோடும் , வேறு சில கிறிஸ்தவத் தலைவர்களோடும் சேர்ந்து காங்கோ நாட்டில் உடனடியாக அமைதிக்கு வழிவகுக்கத் திட்டமிட்டுள்ளார்கள் . அங்குள்ள மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதோடு , பசியால் துயருறும் மக்களுக்கு வேண்டிய உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வழிசெய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர் . பல்லாயிரக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்து பாதுகாப்பு இல்லாது இருக்கிறார்கள் . அங்கு நடக்கும் மோதல்களின் நடுவில் இவர்கள் சிக்கி, தாக்குதலுக்கு ஆளாவதோடு , குறிவைத்தும் தாக்கப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன .கனடா நாட்டின் ஓட்டாவாவில் இரண்டு காங்கோ நாட்டு ஆயர்கள் கனடா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் காங்கோ நாட்டில் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுமாறு கோரியுள்ளனர் . 1990 ஆம் ஆண்டிலிருந்து 60 இலட்சம் பேர் இறந்துள்ளனர் . காங்கோவில் திட்டமிட்டு மகளிர் கற்பழிக்கப்படுகிறார்கள் எனச் செய்திகள் கூறுகின்றன .








All the contents on this site are copyrighted ©.