2008-12-03 14:21:19

டிசம்பர் 03 - சர்வதேச ஊனமுற்றோர் தினம்


03டிச.2008. ஊனமுற்றவர்களும் அவர்களின் நிறுவனங்களும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களில் ஒருங்கிணைக்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் வலியுறுத்தினார்.

இன்று சர்வதேச ஊனமுற்றோர் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட மூன், இவ்வாண்டின் இத்தினம், சர்வதேச மனித உரிமைகள் சாசனம் அறிவிக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இடம் பெறுகிறது என்றார்.

இவ்விரண்டு உலக தினங்களுக்கும் நம் அனைவருக்கும் மாண்பும் நீதியும் என்ற தலைப்பே கருப்பொருள் என்றும் உரைக்கும் மூனின் செய்தி, மில்லேனேய வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கான எல்லா நடவடிக்கைகளிலும் ஊனமுற்றோர் இணைத்துக் கொள்ளப்படுமாறும் கூறுகிறது.

உலகின் மக்கட் தொகையில் பத்து விழுக்காட்டினர் அதாவது 65 கோடிப் பேர் ஊனமுற்றவர்கள். இவர்களில் 80 விழுக்காட்டினர் அதாவது 40 கோடிக்கு மேற்பட்டோர் ஏழைநாடுகளில் வாழ்கின்றனர். வளரும் நாடுகளிலுள்ள ஊனமுற்ற சிறாரில் 90 விழுக்காட்டினர் பள்ளிக்குச் செல்வதில்லை என்று ஐ.நா. கூறியது. ஊனமுற்ற நிலையிலுள்ள 2 கோடிப் பெண்கள் அதனை கருவுற்ற காலம் அல்லது குழந்தை பிறப்பின் போது பெறுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.