2008-12-03 14:20:34

ஐரோப்பாவில் காணப்படும் உலகப்போக்கு அக்கண்டத்தின் கத்தோலிக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக் குறைவதற்குக் காரணம்


03டிச.2008. ஐரோப்பாவில் காணப்படும் உலகப்போக்கு அக்கண்டத்தின் கத்தோலிக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக் குறைவதற்குக் காரணமாக இருக்கின்றது என்று கத்தோலிக்கக் கல்வி பற்றிய ஐரோப்பிய கருத்தரங்கில் கூறப்பட்டது.

ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பும், கத்தோலிக்கக் கல்வி பற்றிய ஐரோப்பிய கமிட்டியும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் இவ்வாறு கூறப்பட்டது.

இக்கருத்தரங்கில் உரையார்றிய திருப்பீட பொதுநிலையினர் அவையின் இளையோர் பிரிவின் புதிய இயக்குனர் அருட்திரு எரிக் ஜாக்குனெ, இளையோர் திருச்சபைக்கு எதிராக இல்லை, ஆனால் அவர்கள் திருச்சபை பற்றி அதிகம் அறியாதிருக்கிறார்கள் என்றார்.

பிரான்ஸின் வெனிசியு பங்கில் மட்டும் 65 விழுக்காட்டு இளையோரின் பெற்றோர் பிரிந்து வாழ்கின்றனர் என்றும் அக்குரு கூறினார்.

மேற்கு ஐரோப்பாவில் ஏறத்தாழ 73 இலட்சம் மாணவர்கள் கத்தோலிக்கப் பள்ளிகளில் படிக்கின்றனர். இவர்களில் பாதிப்பேர் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டவர். மாறாக கிழக்கு ஐரோப்பாவில் இரண்டு இலட்சத்துக்கும் குறைவான மாணவர்களே கத்தோலிக்கப் பள்ளிகளில் படிக்கின்றனர். இதனால் அங்கு சில நாடுகளில் கத்தோலிக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.