2008-12-01 19:30:58

பிலிப்பைன்ஸ் நாட்டில் எச்.ஐ.வி அதிகரித்து வருகிறது .01 டிசம்பர் ,08.


பிலிப்பைன்ஸ் நாட்டில் இளைஞர்களிடமும் புலம்பெயர்ந்தோரிடமும் எச்.ஐ.வி.நோய் அதிகரித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. டிசம்பர் முதல் தேதி உலக 21 ஆவது எய்ட்ஸ் தினம் அந்நோயினை ஒழிப்பதற்காகக் கொண்டாடப்பட்டது . இந்த பேரழிவைத் தரும் நோய் உலகெங்கும் பல இலட்சம் உயிர்களைப் பலி வாங்கி வருகிறது . இந்த வியாதியால் வரக்கூடிய தீமைகள் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது . ஆனால் அதைத் தடுப்பதற்கு சரியான வழிகளைச் செயல்படுத்துவதாகத் தெரியவில்லை . எய்ட்ஸ் நோய் புலம் பெயர்வோரிடம் அதிகமாகி வருவதாகத் தெரிகிறது . அவர்களுக்கு மருத்துவ வசதியும் கிடைப்பதில்லை . பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்நோய் இளைஞர்களை அதிகம் தாக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . முக்கியமாக பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வேலை தேடி வெளியேறியிருப்பவர்கள் மத்தியில் இது பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .








All the contents on this site are copyrighted ©.