2008-12-01 15:23:30

டிசம்பர் 02 – கன்னியும் மறைசாட்சியுமான புனித பிபியானா


பக்தியுள்ள தம்பதியருக்குப் பிறந்தவள் புனித பிபியானா. கிறிஸ்தவர் என்பதற்காக அவரது தந்தையின் முகத்தில் சூடான இரும்புக் கம்பியைத் தேய்த்தனர் அந்த்க் கொடுமையில் அவர் இறக்க, பிபியானாவின் தாயையும் தலைவெட்டிக் கொன்றனர். பின்னர் பிபியானா மற்றும் அவளது சகோதரி தெமெத்ரியாவின் உடைமைகள் அனைத்தையும் அபகரித்தனர். எனவே அவர்கள் ஐந்து மாதங்களுக்கு எதுவும் கிடைக்காமல் அந்நாட்களை நோன்பிலும் செபத்திலும் கழித்தனர். ஜூலியன் காலத்தில் இவ்விரு சகோதரிகளும் அவன் முன் கொண்டுவரப்பட்டு கிறிஸ்தவத்தை மறுதலிப்பதற்குத் துன்புறுத்தப்பட்டனர். அவர்கள் உறுதியாய் இருந்ததால் பிபியானா, ரூபினா என்ற கொடிய பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டாள். அவளது முயற்சியும் வீணானது. எனவே பிபியானா தூணில் கட்டப்பட்டு ஈயக்குண்டுகளால் நிறைந்த சாட்டையால் உயிர் பிரியும் வரை அடிக்கப்பட்டாள். அவளது உடல் தெருநாய்களுக்கு உணவாகும்படி இரண்டு நாள் போட்டு வைத்தனர். பின்னர் ஜான் என்ற குரு, அவளது உடலை எடுத்து அவளது தாயும் சகோதரியும் புதைக்கப்பட்டிருந்த வீட்டில் புதைத்தார். 5ம் நூற்றாண்டிலிருந்து உரோமையில் கன்னியும் மறைசாட்சியுமான புனித பிபியானாவுக்கு ஆலயம் இருக்கின்றது.



சிந்தனைக்கு – விசுவாசமே மறைசாட்சிகளை உருவாக்குகிறது








All the contents on this site are copyrighted ©.