2008-11-29 15:02:53

மனித கருவளத் திசுக்களுக்குக் காப்புரிமை வழங்குவதற்கு ஐரோப்பா அலுவலகம் மறுத்துள்ளது


நவ.29,2008. மனித கருவளத் திசுக்களுக்குக் காப்புரிமை வழங்குவதற்கு ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் அனுமதி தர மறுத்திருப்பதை வரவேற்றுள்ளார் ஐரோப்பிய ஆயர்கள் பேரவைகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் அருட்திரு பியோட்டர் மசூர்கிவியச்.

மனித கருவளத் திசுக்களுக்குக் காப்புரிமை வழங்குவது ஐரோப்பிய காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது, இதனை ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தின் தீர்மானம் உறுதி செய்துள்ளது என்ற அக்குரு, மனித கருக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைக்கு இது முக்கியமான அடையாளமாக இருக்கின்றது என்றார்







All the contents on this site are copyrighted ©.