2008-11-29 15:06:17

எய்ட்ஸ் நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க உறுதி எடுப்போம் – ஐ.நா.பொதுச் செயலர்


நவ.29,2008. வருங்காலத்தில் எய்ட்ஸ் நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கவும், இதற்கு முயற்சி எடுப்பவர்களுக்கு நம்பிக்கை நிறைந்த ஊக்கம் கொடுக்கவும் அழைப்புவிடுத்தார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

உலக எய்ட்ஸ் நோய் தினத்திற்கென செய்தி வெளியிட்ட மூன், இந்த இருபதாவது உலக எய்ட்ஸ் நோய் தினம் கடைபிடிக்கப்படும் வேளை இந்நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுபவரும் இறப்பவரும் உலகில் குறைந்து வரும் புதிய காலத்தில் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இவ்வெற்றிக்கு, உலகெங்கும் இதனைக் கட்டுப்படுத்த உழைப்பவர்களும் அரசுகளின் உறுதிப்பாடுகளுமே காரணம் என்றும் மூனின் செய்தி கூறுகிறது.

எனினும் உலகில் இன்னும் மக்கள் இந்நோய் கிருமிகளால் தாக்கப்பட்டு வருகினறனர், உலகில் இடம் பெறும் இறப்புகளுக்கான 10 முக்கிய காரணங்களுள் எய்ட்சும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது, ஆப்ரிக்காவில் இடம் பெறும் இறப்புகளுக்கு இதுவே முக்கிய காரணம் என்றும் ஐ.நா.பொதுச் செயலரின் செய்தி கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.