2008-11-27 16:49:40

திருத்தந்தையின் சமயச் சிந்தனைகளைப் பாராட்டுகிறார் உரோம் மாநகர யூத மதகுரு . 27,நவம்பர்,08.


திருத்தந்தை இவ்வார புதன் மறைபோதகத்தில் சமயக் கலந்துரையாடல் பற்றிச் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். கலந்துரையாடலின் போது அடிப்படைக் கொள்கைகளைப் பற்றி விவாதிக்க முடியாது , மதங்களின் அடிப்படைப் போதனைகளால் சமுதாயத்தில் உண்டாகும் கலாச்சாரத் தாக்கம் பற்றிக் கலந்து பேசலாம் என்றார் திருத்தந்தை . இது சாத்தியமானது ,மற்றும் அடிப்படையானது எனவும் திருத்தந்தை கூறியிருந்தார் .இதுபற்றிக் கூறிய ராபி ரிக்கார்டோ செணி, சமயங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கலந்துபேச இயலாது என்றும் , சமயக்கலந்துரையாடல் அரசியல் சமரசப்பேச்சு அல்ல . இங்கு சமயத்தத்துவங்களும் கோட்பாடுகளும் விட்டுக் கொடுக்க முடியாதவை எனவும் கூறினார் .








All the contents on this site are copyrighted ©.