2008-11-27 16:51:55

இலங்கையின் நிலைமை மிக மோசமாகியுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.2711.


வாணி பகுதியில் 3 இலட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளார்கள் எனக் கூறப்படுகிறது. போர் நடக்கும் பகுதியில் மக்கள் சிறிதளவு உணவே பெற முடிகிறது . சரியான தங்கும் வசதியும் , உடல் நலப் பாதுகாப்பும் இல்லாதிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது . குடிநீர் பற்றாக்குறையும் தொற்று வியாதிகள் பரவும் அபாயமும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .அங்கு பணிபுரியும் மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்கள் இலங்கை அரசைக் கண்டித்துள்ளன . உலகப் பார்வையாளர்களை அங்கு நிலைமையை நேரில் காண வருமாறுக் கேட்டுள்ளன தொண்டு நிறுவனங்கள் . அதிக மழை காரணமாக விவசாயமும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது . அரசு வெளியிடும் செய்திகளுக்கும் உண்மையான நிலவரத்துக்கும் அதிக வேறுபாடு இருப்பதாக ஆம்னெஸ்டி இண்டர்நாஷேனல் நிறுவன இயக்குநர் சாம் சபீரி கூறியுள்ளார் . இதற்கிடையில் விடுதலைப்புலிகளுக்கு முக்கியமான கிளிநொச்சியை அரசுப்படைகள் நெருங்கிவிட்டதாகவும் , நிலைமை மோசமாக இருந்தாலும் அங்குள்ள தமிழ் மக்களைக் காப்பதற்காக போராளிகளை ஊக்குவிக்க விடுதலைப்புலிகளின் தளபதி வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று செய்தி வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.