2008-11-27 16:38:42

அமைதிக்கு வழிவகுப்பது சமயங்களின் கடமை என்கிறார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் , 27, நவம்பர்,08 .


பிரான்ஸ் நாட்டில் 83 ஆவது சமூக விழாக் கொண்டாட்டங்களின் போது திருத்தந்தையின் சார்பாக அவர் விடுத்த செய்தியை விழாவில் கலந்து கொண்ட வத்திக்கான் திருப்பீடச் செயலர் தார்சீசியோ பெர்த்தோனே வழங்கினார் . முந்நாள் திருத்தந்தை 13 ஆம் சிங்கராயர் 1904 ஆம் ஆண்டில் வெளியிட்ட ரேரும் நோவாரும் என்ற சுற்றுமடலோடு பிரான்ஸ் நாட்டின் சமூக விழா தொடங்கப்பட்டது . சமயங்கள் அச்சுறுத்தல்களா - நம்பிக்கைகளா – என்பது இந்த ஆண்டின் சமூக விழாவின் கருத்தாக இருந்தது . மதங்கள் இறைப்பற்றைச் சுதந்திரமாகப் பின்பற்றி வாழ்வதும் , அதேபோலக் சுதந்திரக் குடிமக்களாக வாழ்வதும், வெவ்வேறுவிதமான அமைப்புக்களைக் கொண்ட சமய மற்றும் அரசியல் சித்தாந்தந்களைச் சார்ந்தது எனத் திருத்தந்தையின் செய்தி தெரிவிக்கிறது . மனித மாண்பையுடைய சமூக வாழ்வின் ஏக்கங்களுக்கு அரசு தன்மீது முடிவான பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாகாது எனவும் திருத்தந்தையின் செய்தி தெரிவிக்கிறது . சமயங்கள் போற்றும் இறை நம்பிக்கை சகிப்புத்தன்மை இல்லாமை , மக்களை வேறுபடுத்தி ஓரங்கங்கட்டுவது , மோதல் போக்கு ஆகியவற்றைத் தவிர்த்து , உண்மைக்கு முழு மரியாதை கொடுத்து , மக்களிடையே நல்லுணர்வையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் , மனித உரிமைகளைக் காக்கவும் கொண்டுள்ள கடமைகளை வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.