2008-11-26 16:01:28

மரண தண்டனை நிறைவேற்றும் சட்டத்திற்கு எதிராய் உறுதியான நிலைப்பாடு எடுக்குமாறு ஆஸ்திரேலிய திருச்சபை அழைப்பு


 நவ.26.,2008 மரண தண்டனை நிறைவேற்றும் சட்டத்திற்கு எதிராய் உறுதியான நிலைப்பாடு எடுக்குமாறு ஆஸ்திரேலிய திருச்சபையின் சமூக நீதி அவை அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கேட்டுள்ளது.

மரண தண்டனை பற்றி நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் விவாதமானது, மரண தண்டனையை எதிர்க்கும் ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டை உறுதி செய்வதற்கு அரசியல் தலைவர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்குவதாக இருக்கும என்று சமூக நீதி அவை தலைவர் ஆயர் கிறிஸ்டோபர் சாண்டெர்ஸ் கூறினார்.

இது மரண தண்டனையை தடை செய்வதற்கான சர்வதேச முயற்சிகளைப் புதுப்பிப்பதற்கும் உதவியாக இருக்கும என்றும் ஆயர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே மரண தண்டனை தடை செய்யப்ட்டுள்ளது எனினும் இத்தகைய நிலைப்பாட்டை சட்டமாக்குவதன் மூலம் இனிமேல் வேறு எந்த அரசும் அதை மீண்டும் கொண்டுவராதிருக்கச் செய்ய முடியும் என்றார் அவர்.

உலகில் 133 நாடுகள் மரண தண்டனையைத் தடை செய்துள்ளன. அதேவேளை 64 நாடுகள் தொடர்ந்து அதனைச் செயல்படுத்தி வருகின்றன. கடைசியாக தடை செய்துள்ள நாடு புருண்டியாகும்








All the contents on this site are copyrighted ©.