2008-11-26 20:39:10

கேரள நீதி மன்றம் புலனாய்வுத் துறையிடம் விளக்கம் கேட்கிறது. 26,நவம்பர்.08.


1992 ஆம் ஆண்டு கேரளாவில் ஒரு அருள் சகோதரி அங்கு கிணறு ஒன்றில் பிணமாக மிதந்தார் . அதை விசாரித்த காவலர்கள் அந்த வழக்கை திக்குத் தெரியாமல் மூடி விட்டார்கள் . அதனை தற்பொழுது ஆராய்ந்த இந்தியக் குற்றப் புலனாய்வுத்துறை இரண்டு கேரளக் குருக்கள் மீதும் , ஒரு அருள் சகோதரி மீதும் குற்றம் சுமத்திக் கைது செய்துள்ளது . கைது செய்ததற்கு புலனாய்வுத் துறை சரியான ஆவணங்களை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை . எனவே கேரள உயர் நீதி மன்றம் உடனடியாக சரியான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் துறைக்கு உத்திரவிட்டுள்ளது . இந்நிகழ்ச்சி பற்றி ஓய்வு பெற்ற கோட்டயம் முந்நாள் பேராயர் மாத்யூ மூலக்காட்டையும் விசாரணை செய்துள்ளனர் . இந்த வழக்கை 1992 ஆம் ஆண்டு சகோதரி இறந்த அடுத்த 17 நாட்களில் விசாரணை செய்த காவலர், இந்த ஞாயிறு அன்று தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது .








All the contents on this site are copyrighted ©.