2008-11-26 15:57:33

கத்தோலிக்கோஸ் முதலாம் ஆரம் திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு நன்றி


நவ.26.,2008. ஏறத்தாழ ஒன்பதாயிரம் திருப்பயணிகள் கலந்து கொண்ட இப்புதன் பொது மறைபோதகத்தில் கத்தோலிக்கோஸ் முதலாம் ஆரம் திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்குத் தமது நன்றியைத் தெரிவித்தார்.

புனிதர்கள் பேதுரு பவுல் உரோம் திருச்சபையின் நிறுவனர்களாக இருப்பது போல அர்மேனிய திருச்சபையின் நிறுவனர்களாகப் புனிதர்கள் மத்தேயும் பர்த்லோமேயுவும் இருக்கின்றார்கள் என்ற கத்தோலிக்கோஸ் முதலாம் ஆரம், வருகின்ற சனிக்கிழமையன்று இப்புனிதர்களின் விழாவைக் கொண்டாடவிருப்பதைக் குறிப்பிட்டார்.

நன்னெறி மதிப்பீடுகளும் ஆன்மீக மதிப்பீடுகளும் கிரிஸ்தவ மரபுகளும் பின்னுக்குத் தள்ளப்படும் நிலையை இக்காலத்தில் அனுபவித்து வருகிறோம், எனவே நாம் நமது சபைகளின் அப்போஸ்தலிக்க மூலத்தை அப்போஸ்தலிக்க அழைப்பாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நமது கிறிஸ்தவ சமூகங்களுக்கும் குடும்பங்களுக்கும் மறு-நற்செய்தி அறிவித்தல் தேவைப்படுகிறது என்ற கத்தோலிக்கோஸ் முதலாம் ஆரம், ஐரோப்பா, மத்திய கிழக்கு இன்னும் உலகின் பிற பாகங்களில் நற்செய்தி அறிவிப்பதற்கான முயற்சிகளில் கிறிஸ்தவ சபைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்படுமாறும் அழைப்புவிடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.