2008-11-25 15:07:44

பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுக்கும் உலக தினம்


நவ.25,2008. உலகில் பெண்களுக்கெதிராகச் செய்யப்படும் வன்கொடுமைகள் தனியாட்களுக்கு மட்டுமல்லாமல் அவை ஒட்டுமொத்த சமூகங்களின் வளர்ச்சி, அமைதி மற்றும் பாதுகாப்பை பின்னடைவு செய்கின்றன என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கவலை தெரிவித்தார்.

நவம்பர் 25, இச்செவ்வாய்க்கிழமை பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுக்கும் உலக தினம் கடைபிடிக்கப்பட்தை முன்னிட்டு செய்தி வழங்கிய மூன், ஏழை மற்றும் பணக்கார நாடுகளில் பெண்கள் அடிக்கப்படுகின்றனர், வியாபாரம் செய்யப்படுகின்றனர், கற்பழிக்கப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர், இச்செயல்களைப் புறக்கணிக்கவோ, அவற்றுக்கு நியாயம் சொல்லவோ சகித்துக் கொள்ளவோ கூடாது, மாறாக அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

இளம் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவது குறித்த கவலையையும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் 21 வயதை அடையும் முன்னரே 5 பெண்களுக்கு ஒருவர் வீதம் தாக்கப்படுகின்றனர், பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் 3 பெண்களுக்கு ஒருவர் வீதம் தாக்கப்படுகின்றனர்.

சண்டைகள் இடம் பெறாத பணக்கார நாடுகளில் கூட 14 க்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களின் இறப்புக்கு அல்லது அவர்கள் ஊனமடைவதற்கு முதல் காரணம் ஆண்களால் இழைக்கப்படும் வனமுறையே என்று பெண்களுக்கான ஐ.நா.நிதி அமைப்பு கூறியது.








All the contents on this site are copyrighted ©.