2008-11-25 15:01:28

புனித பவுல் பசிலிக்காவுக்கு ஆஸ்ட்ரிய கிறிஸ்துமஸ் மரம்


நவ.25,2008. புனித பவுல் ஆண்டை சிறப்பிக்கும் விதமாக உரோம் புனித பவுல் பசிலிக்காவுக்கு இவ்வாண்டு கிறிஸ்துமஸ் பெருவிழாவுக்கென 82 அடி உயர ஊசியிலை மரவகையைச் சேர்ந்த கிறிஸ்துமஸ் மரத்தை வழங்கியுள்ளது ஆஸ்ட்ரியா.

ஏறத்தாழ 1700 ஆண்டுகளாகப் புனித பவுல் பசிலிக்காவைப் பராமரித்து வரும் அங்குள்ள பெனடிக்ட் துறவு சபையினருக்கான சிறப்பு பரிசாக இம்மரத்தை தெற்கு ஆஸ்ட்ரிய மாநிலமான கரின்தியாவிலுள்ள கோட்ஷ்சாக் மௌதென் நகர் வழங்கியுள்ளது.

இது குறித்து நன்றி தெரிவித்த அத்துறவுமட அதிபர் அருட்திரு எட்மண்ட் பவர், இத்தகைய நிகழ்வு முதல்முறையாக இடம் பெற்றுள்ளது என்றார்.

கிறிஸ்துமஸ் மரத்தை வழக்கமாக வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா சதுக்கத்தில் பார்த்து வந்துள்ளோம், இப்போது புனித பவுல் பசிலிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ள இம்மரம் புனித பவுல் ஆண்டின் அருளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக இருக்கின்றது என்றும் அருட்திரு எட்மண்ட் கூறினார்.

இம்மரம் வருகின்ற சனிக்கிழமை மின்விளக்குகளால் மின்னும்







All the contents on this site are copyrighted ©.