2008-11-25 15:09:00

கடல்மட்ட உயர்வால் வீடுகளை இழக்கும் ஆபத்தை எதிர் நோக்கும் பசிபிக் கிறிஸ்தவர்கள் ஒருமைப்பாட்டுணர்வுக்கு அழைப்பு


நவ.25,2008. உலக வெப்பநிலை மாற்றத்தால் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கும் பசிபிக் தீவுகளின் கிறிஸ்தவர்கள் சர்வதேச ஒருமைப்பாட்டுணர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

உலக கிறிஸ்தவ சபைகள் மற்றும் நிறுவனங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஒருவாரக் கூட்டத்தில் பேசிய நியூசிலாந்து பிரஸ்பிடேரியன் சபை பாஸ்டர் அசோரா அமோசா, பனிப்பாறைகள் வெடித்து நியூசிலாந்தின் தெற்கு கடற்கரைப் பகுதி வழியே மிதந்து வந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பது கேள்விக் குறியே என்றார்.

வருங்காலத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் கடல்மட்ட உயர்வால் பெருகும் உப்புத் தண்ணீர் மரங்களின் வேர்களை அரித்துத் தின்றுவிடும், கிணறுகளை மாசுபடுத்தும், குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்று 3 பசிபிக்த் தீவு நாடுகளில் ஒன்றான கிரிபாட்டி குடியரசின் பாஸ்டர் பாரானைட் கூறினார்.

1948இல் உருவாக்கப்பட்ட உலக கிறிஸ்தவ சபைகள் மன்றமானது 110க்கும் மேற்பட்ட நாடுகளின் 349 பிரிந்த கிறிஸ்தவ சபைகள், ஆர்த்தோடாக்ஸ், ஆங்கிலிக்கன் இன்னும் பிற சபைகளின் கூட்டமைப்பாகும். இதில் 56 கோடிக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் உள்ளனர்







All the contents on this site are copyrighted ©.