2008-11-24 20:22:53

ஸ்வாசி நாட்டில் அரசின் அடக்குமுறையை ஆயர் கண்டிக்கிறார் ,24,நவம்பர்.08.


ஸ்வாசி நாடு ஆப்பிரிக்காவில் தென் ஆப்பிரிக்காவுக்கும் மொசாம்பிக் நாட்டுக்கும் அருகில் உள்ளது . அங்கு வாழும் 11 இலட்சம் மக்களில் 20 விழுக்காட்டினர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் . அங்குள்ள மன்சீனி மறைமாவட்டத்தின் ஆயராக இருப்பவர் மேதகு லூயி தோவு . அந்நாட்டு அரசு தீவிரவாதத்தை ஒடுக்கப் போவதாகக் கூறிச் சட்டம் இயற்றியுள்ளது . அச்சட்டம் மனித உரிமைகளை மீறுவதற்கும் , அரசியல் மற்றும் செய்தித் தொடர்பு உரிமைகளைப் பறிப்பதற்கும் ஆகும் . அகில உலகமும் இது குறித்துக் கவலை தெரிவித்துள்ளது. இச்சட்டத்தைக் கண்டித்த ஆயர் லூயி தோவு நல்ல உள்ளம் கொண்டோரை இதனை எதிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் . இவர் அங்கு 1985 ஆம் ஆண்டு அங்கு ஆயராகத் நியமிக்கப்பட்டார் .








All the contents on this site are copyrighted ©.