2008-11-22 14:34:24

துறவு வாழ்வுக்கான திருப்பீட பேராயத் தலைவர்-இறையழைத்தல் பெருக அழைப்பு


நவ.22,2008. பல மாற்றங்கள் இடம் பெற்று வரும் இக்காலத்தில் அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வுக்குள்ளும் பல மாற்றங்கள் நடைபெற்றாலும் அது தனது ஆன்மீக ஐக்கியத்திலும் திருச்சபைக்குள்ளான ஒன்றிப்பிலும் வளர்ந்து வருகின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வுக்கான திருப்பீட பேராயம் நிறுவப்பட்டதன் நூறாம் ஆண்டை முன்னிட்டு உரோமையில் நடை பெற்ற கருத்தரங்கின் நிறைவு நாளான இன்று அப்பேராயத் தலைவர் கர்தினால் பிராங் ரோட் ஆற்றிய உரையில் இவ்வாறு பேசினார்.

இப்பேராயம் முதலில் திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் என்பவரால் 1586 ம் ஆண்டு மே 27ம் தேதி ஏற்படுத்தப்பட்டு பின்னர் 1601 இல் ஆயர்கள் பேராயத்தோடு இணைக்கப்பட்டது, அதன் பின்னர், மீண்டும் 1908ஆம் ஆண்டு ஜூன் 29ம் தேதி திருத்தந்தை பத்தாம் பத்திநாதரால் தனியொரு பேராயமாக இயங்க அனுமதி அளிக்கப்பட்டது என்று துறவு வாழ்வுக்கான திருப்பீட பேராயம் உருவான வரலாறையும் கர்தினால் ரோட் விளக்கினார்.

திருச்சபையில் அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வு முறை வளர்ந்த விதம் பற்றியும் விளக்கிய கர்தினால் ரோட், இறையழைத்தல் பெருக வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துச் சொன்னார்.








All the contents on this site are copyrighted ©.