2008-11-22 14:36:26

சுவாசிலாந்தில் இடம் பெற்றுள்ள குண்டு வெடிப்புகள், நாட்டில் கட்டாய மாற்றங்கள் இடம் பெற வேண்டியதை வலியுறுத்துவதாய் இருக்கின்றன - ஆயர்


நவ.22,2008 அண்மையில் சுவாசிலாந்தில் இடம் பெற்றுள்ள குண்டு வெடிப்புகள், முடியாட்சி நடைபெறும் ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் வாழும் ஓரங்கட்டப்பட்ட மக்களின் மீது அக்கறை காட்ட விடுக்கப்படும் அழைப்பாக இருக்கின்றது என்று ஒரு கத்தோலிக்க ஆயர் கூறினார்.

நாட்டில் கட்டாய மாற்றங்கள் இடம் பெற வேண்டியதை வலியுறுத்துவதற்குச் சிலர் கொடூரமான வன்முறை வழிகளைக் கையாளுகின்றனர் என்று திருச்சபை நம்புவதாக மன்சினி ஆயர் லூயிஸ் லோவு தெரிவித்தார்.

நவம்பரில் இடம் பெற்றுள்ள இரண்டு குண்டு வெடிப்புகள், தலைநகர் பபானேயில் 15000 தொழிற் சங்க உறுப்பினர்கள் பேரணி நடத்தியதோடு தொடர்புடையதாக இருக்கின்றன என்றுரைக்கும் ஆயர், சவாசி அரசர் 3ம் மஸ்வாட்டியின் அரண்மனைக்கருகில் செப்டம்பரில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் இருவர் இறந்தனர் பற்றியும் குறிப்பிட்டார்.

நன்மனம் கொண்டவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பயங்கரவாதச் செயல்களைக் கைவிடுமாறு ஆயர்கள் கேட்டுள்ளனர்.

தென்கிழக்கு ஆப்ரிக்காவில் ஏறத்தாழ 12 இலட்சம் மக்களைக் கொண்ட சவாசிலாந்து நாட்டில் மூன்றில் இரண்டு பகுதியினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். சிறிய முடியாட்சி நாடான இங்கு அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுத் தேர்தல்களில் தனியாட்கள் போட்டியிடலாம். பிரதமரை அரசரே தேர்ந்தெடுக்கின்றார்.








All the contents on this site are copyrighted ©.