2008-11-22 15:09:44

ஒரிசாவில் மீண்டும் ஆலயங்களைக் கட்டாதீர் – விஷ்வ ஹிந்து பரிசத் எச்சரிக்கை


நவ.22,2008. ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டில் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான தாக்குதலில் சேதப்படுத்தப்பட்ட ஆலயங்களை மீண்டும் கட்டுவதற்கான ஒரிசா அரசின் நடவடிக்கைக்கு விகைச்பி என்ற விஷ்வ ஹிந்து பரிசத் அல்லது உலக இந்து அவை தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவ சமூகத்தைத் திருப்தி படுத்துவதற்காக வரி கட்டுபவர்களின் பணத்தை செலவழிப்பதற்கு அரசுக்கு உரிமை கிடையாது என்று ஒரிசாவின் விகைச்பி பிரிவு பொதுச் செயலர் கவுரி பிரசாத் ராத் நிருபர்களிடம் கூறினார்.

ஆலயங்களும் கிறிஸ்தவ பயிற்சி மையங்களும் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன என்றுரைத்த அவர், கந்தமாலில் சமூக நல்லிணக்கத்தை அரசு ஏற்படுத்த விரும்பினால் வன்முறையில் சேதமான ஆலயங்களை மீண்டும் கட்டுவதற்கான நிதி உதவி அளிப்பதை அரசு நிறுத்த வேண்டும் என்றார்.

மாநிலத்தின் நிவாரண விதிமுறையில் வழிபாட்டுத்தலங்களுக்கு நிதி உதவி வழங்குவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று ராத் மேலும் கூறினார்.

கந்தமால் மாவட்டத்தில் நடந்த வன்முறையில் 60க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள்.








All the contents on this site are copyrighted ©.