2008-11-21 20:22:34

வெனிசுலா நாட்டில் சாவேஸ் ஆதரவாளர்கள் கோவில்களைத் தாக்கிவருகின்றனர். 21, நவம்பர் ,08.


வருகின்ற 23 ஆம் தேதி வெனிசுலா நாடு தேர்தல் களத்தில் இறங்குகிறது . அந்நாட்டில் மாநகரத் தலைவர் மற்றும் ஆளுநர் தேர்தல் நடைபெற உள்ளது . அந்நாட்டின் மேற்கிலுள்ள பாரீனாஸ் பகுதியில் சாவேஸ் ஆதரவாளர்கள் கத்தோலிக்கத் தேவாலயங்களைத் தாக்கி வருகின்றனர் . அங்குள்ள குரு மாணவர்கள் பயிலும் கல்லூரியை அங்குள்ள சோஷலிஸ அரசு கையகப்படுத்தத் திட்டமிட்டது . அதற்கு ஆயர் ரமோன் அந்தோனியோ லீனாரஸ் சாந்தோவால் எதிர்ப்புத் தெரிவித்தார் . அதற்கு சாவேஸின் ஆதர்வாளர்கள் “ஆயர் ஒழிக”, என்றும் , “நாட்டில் சோஷலிஸம் வேண்டும் அல்லது சாவு”, என ஆலயங்களில் எழுதியுள்ளனர் . வெனிசுலாவின் புல்பிரைட் பதக்கம் வென்றவர் அங்கு வெளியாகும் சயன்ஸ் மானிட்டர் நாளேட்டில் சாவேஸின் கொள்கைகள் இத்தாலிய நாட்டின் முசோலினியை நினைவுபடுத்துகிறது என எழுதியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.