2008-11-20 18:45:44

மெக்சிக்கோ- குடியேறுதல் பற்றிய சீர்திருத்தத்தை வரவேற்கின்றனர் கத்தோலிக்கர்கள் .20,நவம்பர் ,08.


அமெரிக்காவில் வாழும் மெக்சிக்கோ நாட்டின் கத்தோலிக்கர்களில் 69 விழுக்காடு மக்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் கொண்டுவந்துள்ள குடியேறுதல் பற்றிய சீர்திருத்தத்தை வரவேற்றுள்ளதாக ஜாக்பி என்ற கணக்கெடுப்புக் கூறுகிறது . அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாது வாழ்வோருக்கு குடியுரிமை பெற இச்சீர்திருத்தம் வழி வகுக்கிறது . அமெரிக்கா இந்த இரு நாடுகளுக்கும் இடையே மதில் சுவர் எழுப்புதற்கு உள்ள திட்டத்தை மெக்சிக்கோ கத்தோலிக்கர்கள் எதிர்க்கிறார்கள் . அமெரிக்காவின் ஆயர்குழுவின் புலம் பெயர்ந்தோர் சேவைக்கான மன்றம் சென்ற மாதம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது .








All the contents on this site are copyrighted ©.