2008-11-20 11:12:34

நவம்பர் 21 – காணிக்கை மாதா விழா


பழைய ஏற்பாட்டில் குழந்தையின்றி இருந்த பெற்றோர் தங்களுக்கு இறைவன் குழந்தை வரம் கொடுத்தால் அக் குழந்தைக்கு மூன்று வயது முடிந்ததும் அதனை இறைவனுக்கு நேர்ந்து ஆலயத்தில் காணிக்கையாக்குவது வழக்கம். இச்சிறுவர்கள் சிலகாலம் கோவிலில் வளருவார்கள். மரியாவும் கோவிலில் வளர்ந்ததாகப் பாரம்பரியம் கூறுகிறது அருளால் நிறைந்த மரியா வளர வளர இதை ஒரு சடங்காக மாத்திரம் பார்க்காமல் தான் இறைவனுக்கே உரியவள் என்ற மனநிலையில் வளர இச்சூழல் பேருதவியாக இருந்தது. மரியா ஆலயத்தில் காணிக்கையாக்கப்பட்டதைத் திருச்சபை இந்நாளில் நினைவுகூருகிறது. 6வது நூற்றாண்டிலேயே இவ்விழா தொடங்கப்பட்டது. 16வது நூற்றாண்டு முதல் திருச்சபை முழுவதும் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. மனிதர்களால் எழுப்பப்பட்ட ஆலயத்திலும் மிக மேலான ஆலயமாக மரியா காட்சி தருகிறார். இவ்வாலயத்தில் இறைவன் வாழ்ந்தார். அதனை ஒவ்வொரு கணமும் புனிதப்படுத்தினார். எனவே இறைவனின் பிள்ளைகளாகிய நாமும் அவரின் ஆலயங்கள். இதனை உணர்ந்து வாழ அழைக்கப்படுகிறோம்.

சிந்தனைக்கு – கடவுளின் அன்பை உணராத இதயங்கள் வெற்றிடங்களே







All the contents on this site are copyrighted ©.