2008-11-20 18:26:32

ஜப்பானில் மறைசாட்சியரின் முத்துப்பேறு பட்டவிழா . 20,நவம்பர் ,08.


ஜப்பானின் 188 மறைசாட்சியர் முத்துப்பேறு பட்டம் பெற உள்ளனர் . இவர்கள் கி.பி. 1603- 1639 ஆகிய 17 ஆம் நூற்றாண்டில் திருமறைக்காக கொல்லப்பட்டவர்கள் . முத்துப்பேறு பட்ட விழா இம்மாதம் 24 ஆம் தேதி நாகசாகியிலுள்ள பெரிய வளாகத்தில் நடக்கவுள்ளது . திருப்பலியை டோக்கியோவின் ஓய்வு பெற்ற கர்தினால் பீட்டர் செயிக்கி சிரயாங்கி முன் நின்று நடத்துவார் . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டின் தூதராக புனிதர் பட்டம் வழங்கும் வத்திக்கான் மன்றத்தின் ஓய்வு பெற்ற கர்தினால் ஜோஸ் சரைவா மார்ட்டின்ஸ் செல்கிறார் . ஜப்பானில் மறைபோதகர் இயேசு சபையின் புனித பிரான்சிஸ் சேவியர் கத்தோலிக்கத் திருமறைக்கு 1549- 1552 ஆண்டுகளில் வித்திட்டார் . தொடர்ந்து இயேசு சபையின் பால் மீகியும் அவருடைய தோழர்களும் அங்கு கொல்லப்பட்டு மறைசாட்சி மகுடம் பெற்றார்கள் . இப்பொழுது முத்திப்பேறு பட்டம் பெறுபவர்களில் நால்வர் குருக்கள் , இவர்களில் இயேசு சபையினர் உள்ளனர். முத்தி பெறுபவர்களில் 184 பேர் பொது நிலைக் கிறிஸ்தவர்கள் . கடவுள் மீது நாம் ஆழ்ந்த பற்றுக்கொண்டு வாழவேண்டும் , வாழ்வு அன்பு மயமாக இருக்க வேண்டும் என கிறிஸ்தவர்களுக்கு அறிவித்துள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.